பிரபல இயக்குனர் விசு காலமானார்!

பிரபல தமிழ் இயக்குனர் விசு உடல்நலக்குறைவால் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 74.
விசுவின் மரணத்தை அடுத்து திரையுலக பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

visu3
எஸ்பி முத்துராமன் இயக்கிய ’குடும்பம் ஒரு கதம்பம்’ என்ற படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் விசு, அதன்பின்னர் மணல்கயிறு, நாணயம் இல்லாத நாணயம், திருமதி ஒரு வெகுமதி, அவள் சுமங்கலிதான், சிதம்பர ரகசியம் உள்பட பல படங்களை இயக்கினார். மேலும் பல படங்களில் நடிகராகவும் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

visu2
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் குறைவால் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் விசு, சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி காலமானார். குடும்ப பாங்கான படங்களை இயக்கி வந்த இயக்குனர் விசுவின் மறைவால் தமிழ் திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.